பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகக் கருதப்படும் வகையில், வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மிக மோசமான சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 114 ரன்களுக்குச் சுருண்டது.
மேலும் வங்கதேச அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா அதிரடியாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தார். இந்தத் தோல்வியானது பாகிஸ்தான் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் வங்கதேச அணியின் இளம் ரத்தங்கள் முக்கியப் பங்காற்றின. குறிப்பாக நஹித் ராணா போன்ற நான்கு புதிய மற்றும் இளம் வீரர்கள் பாகிஸ்தான் போன்ற அனுபவம் வாய்ந்த அணியைத் தங்களது அபாரமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கால் திணறடித்தனர். வெறும் 15.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வங்கதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் 27 கால வரலாற்றுப் பதிவுகளை மாற்றியமைத்த இந்த வெற்றியின் மூலம், வங்கதேசம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. அதேசமயம், சொந்த மண்ணிலும் வெளியூர்களிலும் தொடர்ந்து சறுக்கி வரும் பாகிஸ்தான் அணிக்கு இது ஒரு பெரும் அவமானமாகப் பார்க்கப்படுகிறது.
