இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, “கண்ணியமாக மரணமடைவது அடிப்படை உரிமை” என்பதை அங்கீகரித்து, முதல்முறையாகக் கருணைக் கொலைக்கு  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்ற இளைஞர், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மாடியிலிருந்து விழுந்ததில் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார். உணர்வற்ற நிலையில், செயற்கைச் சுவாசக் கருவிகள் மற்றும் குழாய் வழி உணவின் உதவியுடன் உயிர் வாழ்ந்து வந்த தனது மகனின் நிலையைத் தாங்க முடியாத அவரது தந்தை, மகனைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் நீண்டகாலமாகப் போராடி வந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.அதில்  “ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணியமாக வாழ்வதற்கு உரிமை இருப்பது போலவே, மீள முடியாத மருத்துவ நிலையில் இருப்பவர்கள் கண்ணியமாக மரணமடைவதும் அவர்களது அடிப்படை உரிமையாகும். அதனப்பிறகு ஹரிஷ் ராணாவின் தந்தை விடுத்த உருக்கமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் செயற்கைச் சுவாசத்தை  நிறுத்த அனுமதி வழங்கினர். இதன் மூலம், இந்தியாவில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட முதல் கருணைக் கொலை நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.

மேலும் இந்தத் தீர்ப்பு குணப்படுத்தவே முடியாத நோயால் அவதிப்படுபவர்களுக்கும், பல ஆண்டுகளாக சுயநினைவின்றி இருப்பவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு மாற்றுப் பாதையைத் திறந்துவிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது