தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகியான ரஞ்சனா, அக்கட்சியின் ஒரு பகுதியினரை ‘வல்கர் வாரியர்ஸ்’ (Vulgar Warriors) என்று குறிப்பிட்டு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் விஜய்யின் மனைவி சங்கீதாவையே மிகத் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசி வரும் இந்தத் தொண்டர்களை விஜய் ஏன் இன்னும் கண்டிக்காமல் மௌனம் காக்கிறார் என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். “பெண் உரிமையைப் பற்றி மேடையில் முழங்கும் ஒரு கட்சியின் தொண்டர்கள், அதே தலைவரின் மனைவியையே கேவலமாகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று ரஞ்சனா தனது பேட்டியில் சாடியுள்ளார்.

​மேலும், ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகப் புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், அதே நடிகையுடன் பொதுவெளியில் விஜய் வலம் வருவது அவரது மனைவிக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சொந்தக் குடும்பத்துப் பெண்ணின் உணர்வுகளுக்கே மதிப்பளிக்காத ஒருவரால், மாநிலத்துப் பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற விவாதத்தை ரஞ்சனா கிளப்பியுள்ளார். இந்த ‘வல்கர் வாரியர்ஸ்’ கலாச்சாரத்தை விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் இது கட்சியின் நற்பெயருக்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.