வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

ஆனால், இந்த நிகழ்விற்காகப் போடப்பட்ட பிரம்மாண்ட மேடை மற்றும் செய்யப்பட்ட ஆடம்பரச் செலவுகளைச் சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர் ஒருவர் வெளியிட்டுள்ள விமர்சன வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

“வெறும் மோர் கொடுப்பதற்கு ஒரு நிகழ்ச்சியா? இதற்கு ஒரு மேடை, இத்தனை செலவுகள் தேவையா? உருப்படியாக மக்கள் வரிப்பணத்தைச் செலவழிக்க மாட்டீர்களா?” என்று அவர் சென்னை மாநகராட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இந்த வீடியோ தொகுப்பில், அடிப்படை வசதிகளுக்காக மக்கள் காத்திருக்கும் வேளையில், விளம்பரத்திற்காக இவ்வளவு பெரிய மேடை அமைத்து மோர் வழங்குவது அவசியமற்றது என அவர் கடுமையாகச் சாடியுள்ளார். “மக்கள் பணத்தை வீணாக்குவதை நிறுத்திவிட்டு, உருப்படியான நலத்திட்டங்களில் கவனம் செலுத்துங்கள்” என்ற அவரது காட்டமான பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“>

 

த.வெ.க ஆதரவாளர்களின் இத்தகைய நேரடி விமர்சனங்கள் ஆளுங்கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.