தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு சிறுமியின் வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், கும்பலாக வந்த திமுக உடன்பிறப்புகள் ஒரு வீட்டின் முன் நின்று ஓட்டு கேட்க, அங்கிருந்த ஒரு சிறுமி எவ்வித தயக்கமும் இன்றி, “எங்க ஓட்டு TVK-க்குதான் (தமிழக வெற்றிக் கழகம்), இங்க வராதீங்க!” என்று பளிச்சென்று கூறி அவர்களை வாயடைக்கச் செய்துள்ளார். குழந்தையின் இந்தத் துணிச்சலான பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திமுகவினர், அங்கிருந்து மௌனமாக நகர்ந்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.

“>

 

இந்த வீடியோ தற்போது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “குழந்தைகள் மனதிலும் விஜய் இடம் பிடித்துவிட்டார்” என்றும், “இதுதான் உண்மையான மாற்றத்திற்கான அறிகுறி” என்றும் த.வெ.க ஆதரவாளர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

அதே சமயம், அரசியல் களத்தில் ஒரு சிறு குழந்தையின் இந்த வெளிப்படையான பேச்சு, ஆளுங்கட்சியினருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள், “குழந்தையும் தெய்வமும் ஒன்று” எனப் பதிவிட்டு, இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.