திரையுலகில் தனது நக்கல் மற்றும் நையாண்டிப் பேச்சுகளால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்கும் இயக்குனர் பார்த்திபன், தற்போது நடிகை த்ரிஷா குறித்துப் பேசிய ஒரு விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபனிடம், திரையில் தோன்றிய த்ரிஷாவின் ‘குந்தவை’ புகைப்படத்தைக் காட்டி தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.
I was informed by the organisers of a recent event that my name and picture were included at the last minute at the request of an individual conveyed through his assistant.
A microphone doesn’t make a comment intelligent or humorous. It just makes stupidity louder.Crude words…— Trish (@trishtrashers) March 8, 2026
அதற்கு தனது பாணியில் பதிலளித்த பார்த்திபன், “இந்த குந்தவையை கொஞ்ச நேரம் குந்த (உட்கார) வைப்பது நல்லது” என்று கமெண்ட் அடித்தார். நகைச்சுவைக்காக அவர் இப்படிச் சொன்னாலும், இதைக் கேட்டு செம அப்செட்டான த்ரிஷா, சும்மா விடுவாரா? உடனடியாக தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பார்த்திபனின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.
“ஒரு பெண்ணைப் பற்றி பொதுவெளியில் இப்படித்தான் பேசுவதா?” என்ற ரீதியில் த்ரிஷா ரசிகர்கள் கொந்தளித்து வர, பார்த்திபனின் இந்த ‘குந்தவை’ கமெண்ட் இப்போது கோலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
