காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பார்கள், ஆனால் டெல்லியில் ஒரு இளைஞர் செய்த காரியம் இப்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக (DU) வளாகத்தில் ஒரு காதல் ஜோடிக்கு இடையே திடீரென வாக்குவாதம் வெடித்தது.

இதில் கோபமடைந்த காதலியைச் சமாதானப்படுத்த அந்த இளைஞர் செய்த செயல் அங்கிருந்தவர்களை அதிரவைத்துள்ளது. தனது காதலியின் காலடியில் விழுந்த அந்த இளைஞர், காதலியின் காலணிகளில் தனது மூக்கை தேய்த்து (Nose rubbing) மன்னிப்புக் கேட்டு கதறியுள்ளார்.

ஆனால், அந்தப் பெண்ணோ சற்றும் இரக்கமில்லாமல், “உன்னுடன் வாழவே பிடிக்கவில்லை, இதெல்லாம் ஒரு டிராமா” என்று கூறிவிட்டு, அந்த இளைஞரின் நெஞ்சிலேயே ஓங்கி ஒரு மிதி விட்டுள்ளார். இதில் அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னிலையிலேயே நடந்த இந்தச் சம்பவம் அங்கிருந்த ஒருவரின் செல்போனில் பதிவாகி தற்போது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், “காதல் என்ற பெயரில் இப்படியா தன்மானத்தை இழப்பது?” என்றும், “பெண் செய்த செயல் அநாகரீகமானது” என்றும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.