கோவை மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி கோவையில் கல்லூரி மாணவி ஒருவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த மூன்று நபர்களும், என்கவுன்ட்டர் பாணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

குற்றம் நடந்த 4 மாதங்களுக்குள்ளேயே இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு, தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நீதித்துறையின் மிக விரைவான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

நீதிமன்றம் இம்மூவரையும் குற்றவாளிகள் என உறுதி செய்துள்ள நிலையில், இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.