தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரத்தில் நடிகை த்ரிஷா தான் காரணம் என்று பேசப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ள நிலையில், பிரபல இயக்குனர் அமீர் இது குறித்து தனது கண்டனத்தை மிகக் கடுமையாகப் பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் அமீர் தனது X தளப் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டிருக்கிறார்” என்று விஜய்யை மறைமுகமாகச் சாடியுள்ளார். தனது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரையும் வீட்டிலிருந்து விரட்டிவிட்டு, ‘மகளிர் தினம்’ என்ற பெயரில் அரசியல் நிகழ்ச்சி நடத்துவது கேவலமான அரசியல் என்று அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். பொதுவாழ்வில் பெண்கள் உரிமை பேசும் ஒருவர், தனது சொந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் உரிமையை மதிக்கவில்லை என்ற அமீரின் இந்த விமர்சனம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
