“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்ற பழமொழியைப் பொய்யாக்கும் வகையில், தன்னைத் தாக்க வந்த பாம்பை அச்சமின்றிப் பிடிக்க முயன்ற பெண் ஒருவரின் வீடியோ இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக வனப்பகுதிகளில் இருந்து, உணவு மற்றும் இருப்பிடத்திற்காகப் பாம்புகள் மனிதர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வீட்டின் சமையலறை, படுக்கையறை மற்றும் இருசக்கர வாகனங்களுக்குள் பதுங்கியிருக்கும் பாம்புகளால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.

 

தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒரு பெரிய பாம்பைப் பிடிக்கப் பெண் ஒருவர் முயற்சி செய்கிறார். பொதுவாக மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லும் பாம்புகள், தன்னைத் தாக்க வருவதை உணர்ந்ததும் ஆக்ரோஷமாகப் படமெடுத்து அந்தப் பெண்ணை நோக்கிச் சீறுகின்றன.பாம்பு பலமுறை அந்தப் பெண்ணைத் தாக்க முயன்ற போதிலும், அவர் சற்றும் பதற்றமடையாமல் லாவகமாகப் பாம்பைக் கையாளுகிறார். உயிருக்கு ஆபத்தான விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அந்தப் பெண் காட்டிய துணிச்சலும், விடாமுயற்சியும் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “அந்தப் பெண்ணின் தைரியத்தைப் பாராட்டினாலும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றிப் பாம்புகளைப் பிடிப்பது ஆபத்தானது” எனத் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.