இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) மற்றும் கச்சா எண்ணெய் இருப்பு குறித்து பரவி வரும் பல்வேறு தகவல்களுக்கு மத்திய அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நம்மிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையிருப்பு உள்ளதாகவும், எந்தவொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மூடப்படவில்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த மாதத்தில் மட்டும் ரஷ்யாவிலிருந்து 20 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம் முதல் அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அச்சப்படத் தேவையில்லை என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
