ஹரியானாவில் ஹோலி பண்டிகையின் போது, இளைஞர்கள் சிலர் பசுமாடு ஒன்றிற்குப் பலவந்தமாக மது புகட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போதையில் இருந்த அந்த இளைஞர்கள், பசுவின் வாயைத் திறந்து மதுவை ஊற்றுவதுடன், அந்தச் சூழலிலும் அந்தப் பசுவை வண்டி இழுக்கச் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

மிருகங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியான செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.இந்தக் கொடுமையான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
<a href=”http://

“>
இவ்வளவு கொடூரமான செயலைச் செய்தவர்கள் மீது இதுவரை காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விலங்குகள் மீதான இந்த வன்முறைக்கு எதிராக மக்கள் நீதி கோரி வருகின்றனர்.