கடந்த சில நாட்களாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் நீடித்து வந்த பெரும் இழுபறி மற்றும் சலசலப்புகளுக்கு இன்று ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சந்தித்து தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டனர்.
அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், கூடுதலாக ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அதிக இடங்களைக் கேட்டு முரண்டு பிடித்து வந்த காங்கிரஸ், திமுகவின் கறாரான பிடியால் ஒருகட்டத்தில் இறங்கி வந்து இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் திமுக தலைமையிலான மெகா கூட்டணி தேர்தலைச் சந்திக்க முழு வீச்சில் தயாராகிவிட்டதால், மற்ற கூட்டணிக் கட்சிகளும் தங்களது அடுத்தகட்ட நகர்வுகளைத் தொடங்கிவிட்டன.
