தஞ்சாவூரில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது உரையின் போது திமுக-வை கடுமையாகச் சாடினார். “ஓம் சக்தி பராசக்தி.. திமுக ஒரு தீய சக்தி!” என்று இப்போது சின்னக் குழந்தைகள் கூட சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார்.

சிறுபான்மையின சகோதரர்களைப் பயமுறுத்தி ஓட்டு வாங்கும் ஏமாற்று வேலைகள் இனி செல்லுபடியாகாது என்றும், தனது பேச்சைத் திரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தில்லுமுல்லு வேலைகள் பலிக்காது என்றும் ஆவேசமாகப் பேசினார். தன்னை பாஜக-வின் ஆள் என்று முத்திரை குத்த முயல்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், உண்மையான பிரதிநிதி யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.