சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்குரிய கூட்டணியை உறுதி செய்துவிட்ட நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார். திமுகவுடன் இணைய முயன்றபோது விசிகவின் எதிர்ப்பாலும், தவெக பக்கம் செல்ல முயன்றபோது அந்தத் தரப்பில் எழுந்த தயக்கத்தாலும் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதனால் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணியை நோக்கி அவர் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.இருப்பினும், இந்தக் கூட்டணியிலும் பாமக இணைவதில் சிக்கல் நீடிக்கிறது.

அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, மாம்பழம் சின்னத்தை ஒதுக்க மறுத்தது, தொகுதி பங்கீடு குறித்த நிபந்தனைகள் மற்றும் ராமதாஸுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய மாட்டேன் என்று கூறியது போன்றவை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

இதனால், இந்தச் சிக்கலான சூழலில் அடுத்து என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்க, டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.