இந்தோனேசியாவில் நேரலை ஒளிபரப்பின் (Live Stream) போது, பெண் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் தனது மனைவியுடன் உணவருந்திக் கொண்டிருந்த நபரைத் தேவையில்லாமல் கிண்டல் செய்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த நபர், அந்தப் பெண்ணின் ஆன்லைன் ரசிகர்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாய்ந்து வந்து அவரைத் தாக்கியுள்ளார். இந்த எதிர்பாராத மோதலால் அந்த இடமே போர்க்களமாக மாறியதுடன், அந்தப் பெண்ணின் நேரலையும் பாதியிலேயே துண்டிக்கப்பட்டது.
During a live stream, an Indonesian female influencer made fun of a man who was dining with his wife
Angered by her comments the man reacted and assaulted her in front of her online audience 😮
— RAW CLIPS DAILY (@RawClipsDaily) March 2, 2026
az
தற்போது இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ ‘எக்ஸ்’ (X) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இன்ஃப்ளூயன்சர் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நக்கல் செய்திருக்கக் கூடாது என்று ஒரு தரப்பினரும், அதற்காக ஒரு பெண்ணை இப்படி வன்முறையாகத் தாக்குவது மிகப்பெரிய தவறு என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மற்றவர்களைக் காயப்படுத்துவது போன்ற செயல்கள் எப்படி ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.
