“என்னை கேட்டு பெத்தீங்களா?” – 21 வயது வாலிபரின் இந்த விசித்திரமான வாதம் இப்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, ஒரு மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தான் பிறப்பதற்கு தன்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை என்றும், அதனால் தான் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் பிடிவாதம் பிடித்துள்ளார். “நான் இந்த உலகிற்கு வர விருப்பம் தெரிவிக்கவில்லை; எனவே என்னை வாழ்நாள் முழுவதும் பொருளாதார ரீதியாகக் கவனித்துக்கொள்வது எனது பெற்றோரின் கடமை” என அவர் பேசியிருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது.

​இந்த ‘வித்தியாசமான’ கொள்கையை உடைய இளைஞரின் பேச்சுக்கு ஒருபுறம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபுறம் இது “Anti-natalism” (பிறப்பு எதிர்ப்பு கொள்கை) குறித்த விவாதத்தையும் சோசியல் மீடியாவில் சூடாக்கியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பது கடமையா அல்லது பிள்ளைகள் வளர்ந்த பிறகு சுயமாக உழைக்க வேண்டுமா என்ற மோதல் இப்போது டிரெண்டாகி வருகிறது.