சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாக வேண்டுமானால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி! பொதுவாக தேனீக்கள் கடித்தால் உடல் வீங்கி, தாங்க முடியாத வலி ஏற்படும். ஆனால், ஒரு இளைஞர் பயமே இல்லாமல் தேனீக்களின் கூட்டில் கையை விட்டு, ஒரு பிடி தேனீக்களை அள்ளி அப்படியே தனது தலையில் வைத்துக் கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தை அதிர வைத்துள்ளது. @Simple__Bandaa_ என்ற எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்த இளைஞர் தேனீக்களுடன் விளையாடும் விதம் பார்ப்பவர்களை உறைய வைக்கிறது.
Bhai ka content koi copy nahi kar sakta 🫡🫡🫡 pic.twitter.com/Z82rE8lzRj
— Simple man (@Simple__Bandaa_) March 1, 2026
முகமெல்லாம் தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்தாலும், அவர் முகத்தில் ஒரு சிறு பதற்றம் கூட இல்லை. “இந்தக் கன்டென்ட்டை யாராலும் காப்பி அடிக்க முடியாது” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஏற்கனவே லட்சக்கணக்கான வியூஸ்களைக் கடந்து வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் “இவருக்கு என்ன தேனீக்கள் சொந்தக்காரர்களா?” என்றும், “பார்க்கவே பயமாக இருக்கிறது” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
