சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் காட்டில் மரங்களின் மீது ஏறும் வேகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பைடர்மேன் மற்றும் குரங்கைப் போன்ற சுறுசுறுப்புடன் அவர் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவும் விதம் பிரமிக்க வைக்கிறது.

மேலும் அவரின் இந்த அசாதாரண திறமையைக் கண்டு வியந்த நெட்டிசன்கள், அவரை “நிஜ வாழ்க்கை ஸ்பைடர்மேன்” என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல பயனர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>

இது குறிப்பாக, ஒரு பயனர் இவரை ‘மோக்லியின் தந்தை’ என்று வர்ணித்துள்ளார். காட்டில் இயற்கையோடு ஒன்றிப்போய் அவர் காட்டும் இந்த சாகசம், மனித ஆற்றலின் எல்லைகளைக் கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.