ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் இணைந்து ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு முக்கிய கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பிராந்திய நிலைத்தன்மையை சீர்குலைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த நாடுகள், தமது நலன்களையும் நட்பு நாடுகளையும் பாதுகாக்கத் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தயார் என அறிவித்துள்ளன. குறிப்பாக, ஈரானின் ஏவுகணைகளை அவை ஏவப்படும் இடத்திலேயே அழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சமீபத்தில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழலில், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் அப்பாவி பொதுமக்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கண்டித்துள்ளனர். ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவும், தேவைப்பட்டால் ராணுவ ரீதியான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த மூன்று நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.