தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு கேட்டு மனு தாக்கல் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இது தொடர்பாக திருச்சி சூர்யா பரபரப்பான கருத்துக்களை முன்வைத்துள்ளார். சங்கீதா 21 பக்க விவாகரத்து மனுவில் பிரபல நடிகையுடன் தன்னுடைய கணவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் இந்த விவகாரம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனக்கு தெரிய வந்ததாகவும் கூறினார்.

அப்போது அந்த உறவில் இருந்து வெளிவருவதாக உறுதியாக கூறிய போதிலும் தொடர்ந்து உறவை தொடர்ந்ததாக குற்றம் சாட்டிய நிலையில் அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வது மற்றும் வீட்டுக்கு அழைத்து வந்தது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார் என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு தற்போது திருச்சி சூர்யா கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சங்கீதா நடிகர் விஜய் இரு நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாக சங்கீதா மனுவில் குறிப்பிட்டதாக அவர் கூறியுள்ளார். நாய்க்குட்டி வளர்க்கும் நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களில் அவர் ஈடுபட்டதாகவும் அந்த நடிகையின் வீட்டிற்கு தான் விஜய் செல்வார் எனவும் அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வர மாட்டார் எனவும் கூறினார்.

அதே நேரத்தில் வீட்டில் தன்னுடன் வைத்திருந்தது வேறொரு நடிகை என்றும் கூறியுள்ளார். வேறொரு நடிகையுடன் விஜய் வீட்டில் இருந்த போது சங்கீதா பெரும் தகராறு செய்ததாகவும் அப்போது இது பற்றி செய்தி சேகரிக்க சென்ற ஒரு பத்திரிக்கையாளரை விஜய் வீட்டிற்குள் அடைத்து வைத்திருந்ததாகவும் கூறிய அவர் இந்த விவகாரம் இரண்டு நாட்களாக பெரிய அளவில் பேசப்பட்டது என்றார்.

மறுநாள் காலை விஜய் வீட்டில் வைத்திருந்த நடிகையின் கார் அவரது நண்பர் சஞ்சீவ் வீட்டில் நின்றது. எனவே விஜய் வீட்டில் வைத்திருந்தது ஒரு நடிகை எனவும் வெளிநாடுகளுக்கு செல்வது வேறொரு நடிகையுடன் எனவும் மொத்தம் இரண்டு நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த இரண்டாவது நடிகைக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது என்றும் கூறியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by ZEE Tamil News (@zeetamilnews)