நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்துப் பரவி வரும் விவாகரத்து வதந்திகள் கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தளபதி ரசிகை ஒருவரின் வீடியோ இப்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசியுள்ள இளம் பெண் ஒருவர், “எங்க தளபதிக்கு மனைவியாக இல்லாவிட்டாலும், ஒரு சகோதரியாக, ஒரு ரசிகையாக நாங்கள் எப்போதும் பக்கபலமாக இருப்போம்.

அவருக்கு ஒரு கஷ்டம் என்றால் நாங்க பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என மிகவும் ஆவேசமாகவும், எமோஷனலாகவும் பேசியுள்ளார்.

2026 தேர்தலுக்காக விஜய் தீவிரமாகத் தயாராகி வரும் வேளையில், அவரது குடும்ப வாழ்க்கையைப் பற்றி வரும் தேவையற்ற விமர்சனங்கள் தங்களை வேதனைப்படுத்துவதாக அந்தப் பெண் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை ஒருவருடன் விஜய்யை இணைத்துப் பேசி வரும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ, தற்போது ‘தளபதி’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.