தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் பிப்ரவரி 26, 2026 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்தது. ‘விரோஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திருமண கொண்டாட்டத்தில் நடந்த சங்கீத் விழாவில் விஜய் தேவரகொண்டாவின் தாயார் தனது மருமகளுக்குப் பாரம்பரிய வளையல்களைப் பரிசளித்த நெகிழ்ச்சியான தருணம் அனைவரையும் கவர்ந்தது.

சுமார் 50 நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்தத்திருமணத்தில், ஆஷிகா ரங்கநாத், ஈஷா ரெப்பா போன்ற திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றன. மேலும், விருந்தினர்களுக்கு ஜப்பானிய உணவுகள் உள்ளிட்ட விசேஷ மெனுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

உதய்பூர் திருமணத்தைத் தொடர்ந்து, மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் திரையுலகினருக்காகப் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்தத் திருமணத்திற்காகத் திங்கட்கிழமை இரவு குடும்பத்தினருக்குச் சிறப்பு விருந்து அளிக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்குப் பிறகு இந்தத் தம்பதியினர் இரண்டு மாதங்களுக்குச் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளனர்.

உதய்பூரின் எழில் கொஞ்சும் ஆரவல்லி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நட்சத்திர ஹோட்டலில் இவர்களது புதிய வாழ்க்கை மிக நெருக்கமான வட்டத்திற்குள் இனிதே தொடங்குகிறது.