எக்ஸ் வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்றில் பேருந்து ஒன்று பெண் ஒருவரின் மீது ஏறி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. கொல்லம் அருகே நடந்த இந்த விபத்தில், அந்தப் பெண்மணி பேருந்தின் முன் படிக்கட்டு வழியாக ஏறுவதற்காக, பேருந்தின் முன்பக்கத்தைக் கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது நிறுத்தத்தில் நின்றிருந்த பேருந்தை ஓட்டுநர் கவனிக்காமல் ஸ்டார்ட் செய்து நகர்த்தியதால், அந்தப் பெண் மீது பேருந்து மோதியது.

இதில் நிலைதடுமாறி அவர் பேருந்தின் அடியில் விழுந்தார். பேருந்து அவர் மீது ஏறிச் சென்ற போதிலும், நல்வாய்ப்பாக அவர் டயர்களில் சிக்கவில்லை. பேருந்தின் அடிப்பகுதியின் இடைவெளியில் அவர் இருந்ததால், எந்த ஒரு காயமும் இன்றி அதிசயமாக உயிர் தப்பினார்.