தற்போது தமிழக அரசியலில் திமுகவுக்கும், தனது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் போட்டி என்று விஜய் பேசி வருவதை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கடுமையாகச் சாடியுள்ளார். “விஜய் இப்படிப் பேசுவது ஒரு காமெடி போல இருக்கிறது” என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விஜய் ஏன் புறக்கணித்தார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

​எம்ஜிஆரை விஜயுடன் ஒப்பிடுபவர்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த 6 மாதத்திலேயே தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றார்” என்பதைச் சுட்டிக்காட்டினார். அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாறு ‘தம்பி’ விஜய்க்குத் தெரியாது என்றும், இன்றைய தேர்தல் களத்தில் அதிமுகவுக்குப் போட்டியாக யாருமே இல்லை என்றும் அவர் மிகத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.