அகமதாபாத் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த விதம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று போட்டிகளாக ரன் ஏதுமின்றி (டக்-அவுட்) ஏமாற்றம் அளித்த அபிஷேக், இந்தப் போட்டியில் மீண்டு வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ ஜான்சனின் ‘நக்கிள் பந்து’ (Knuckle ball) தந்திரத்தில் சிக்கி அவர் வெளியேறினார்.
ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து மெதுவான பந்துகளையும் (Slow balls), நக்கிள் பந்துகளையும் வீசி அபிஷேக் சர்மாவை திணறடித்த விதம், அவரது பலவீனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
Corbin Bosch holds his nerve to grab a stunning catch and send Abhishek Sharma back in this high-stakes clash 402 #T20WorldCup #bcci #trading pic.twitter.com/fKGDAtrVsm
— JASWANT SINGH RATHOD (@RathodSing71459) February 22, 2026
“>
குறிப்பாக, ஜான்சன் வீசிய அந்த ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்து, ஸ்டம்புகளுக்கு அப்பால் மிக மெதுவாக வந்ததை அபிஷேக் கவனிக்கத் தவறிவிட்டார். ஒரு பெரிய ஷாட்டிற்கு ஆசைப்பட்டு அவர் மட்டையைச் சுழற்ற, பந்து மட்டையின் விளிம்பில் பட்டு மிட்-விக்கெட்டில் இருந்த கார்பின் பாஷிடம் கேட்ச் ஆனது. ஒரு அபாரமான டைவிங் கேட்ச் மூலம் அபிஷேக்கின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்த ‘ஸ்லோ பால்’ தந்திரம் தற்போது அபிஷேக் சர்மாவிற்கு எதிரான ஒரு முக்கிய ஆயுதமாக எதிரணிகளுக்குக் கிடைத்துள்ளது. வரும் போட்டிகளில் மற்ற அணிகளும் இதே உத்தியைப் பயன்படுத்தி அவரைத் துன்புறுத்த வாய்ப்புள்ளதால், இந்த நுட்பமான குறைபாட்டை அவர் உடனடியாகச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில், இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகலாம் என்பதே நிதர்சனம்.
