பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பங்கஜ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தூக்கத்தின் நிலைக்கு ஏற்ப தானாகவே இயங்கும் மின்விசிறியை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும் நள்ளிரவில் அதிக குளிர் அல்லது வெப்பம் காரணமாகத் தூக்கம் கலைவதைத் தவிர்க்க விரும்பிய அவர், ராஸ்பெர்ரி பை மற்றும் கணினி பார்வை தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த ரூம்மேட்’டை உருவாக்கியுள்ளார். இந்தச் சாதனம் ஒருவரது தூக்க நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப மின்விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது.
i was tired of waking up at 3 am either sweaty or freezing. so i taught my ai roommate to automatically control the fan by watching me sleep 📸
arms or leg sticking out means i’m hot so fan turns on, arms curled up means i’m cold so fan turns off. it uses a remote button pusher… https://t.co/WYkbbcVoVH pic.twitter.com/slpENOzX9I
— Pankaj (@the2ndfloorguy) February 20, 2026
“>
இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், தூங்கும் போது கைகள் அல்லது கால்கள் போர்வையை விட்டு வெளியே இருந்தால், உடல் வெப்பமாக இருப்பதை உணர்ந்து மின்விசிறியை ஆன் செய்கிறது. அதே சமயம், குளிர் எடுப்பது போல கைகளைச் சுருக்கிக் கொண்டு படுத்தால், தானாகவே மின்விசிறியை அணைத்துவிடுகிறது.
இதற்காக ஒரு சிறிய பட்டன் அழுத்தும் கருவியை அவர் பயன்படுத்தியுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இவரது இந்த ஆக்கப்பூர்வமான முயற்சி, ‘நிஜமான ஸ்மார்ட் ஹோம்’ இதுதான் எனப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
