சமூக வலைதளங்களில் ஒரு குட்டி பூனை செய்யும் அலப்பறை இப்போது உலகையே சிரிக்க வைத்துள்ளது. ஒரு ஸ்கூட்டரில் குட்டி ஹெல்மெட் அணிந்து, செம ஸ்டைலாக அமர்ந்திருக்கும் அந்தப் பூனை, பக்கத்து வண்டியில் இருக்கும் கருவாட்டை (உலர்ந்த மீன்) நைசாகத் திருடப் பார்க்கிறது. ஒரு தேர்ந்த திருடனைப் போல மிக ஜாக்கிரதையாக மீனை நெருங்கும் அந்தப் பூனை, யாரோ எச்சரிக்கை ஒலி எழுப்பியதும் அப்படியே அதிர்ச்சியாகி பின்வாங்கும் காட்சிதான் ஹைலைட்! அந்தத் தருணத்தில் அந்தப் பூனை காட்டும் முகபாவனைகள், ஏதோ திருடும்போது பிடிபட்ட மனுஷன் வெட்கப்படுவது போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

​இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், வாகனங்களில் விலங்குகளை இப்படி அமர வைப்பது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனாலும், அந்தப் பூனையின் ‘கெத்து’ ஸ்டைலும், பிடிபட்டவுடன் அது காட்டிய அந்த ‘பவ்யமான’ ரியாக்ஷனும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பகிர வைத்துள்ளது. இப்போது இணையத்தின் ‘லேட்டஸ்ட்’ வைரல் ஸ்டார் இந்த ஹெல்மெட் பூனைதான்!