மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி சதார் வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பழங்கால சிவலிங்கத்தின் முன், புலி ஒன்று பக்தியுடன் தலைவணங்கும் அரிய காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பக்தர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் காட்டில் உள்ள அந்தச் சிவலிங்கத்தின் அருகே வந்த ஒரு பெரிய புலி, மிகவும் சாந்தமாகத் தனது தலையைச் சிவலிங்கத்தின் மீது வைத்து வணங்குவதை உள்ளூர் பக்தர்கள் ரகசியமாகப் பதிவு செய்துள்ளனர்.
📍Katni, MP: A video from the Sadar forests shows a tiger bowing its head against a sacred Shivling of Lord Shiva.
A powerful moment of nature and Sanatan faith, now going viral. pic.twitter.com/xZRfj24rdo
— Megh Updates 🚨™ (@MeghUpdates) February 21, 2026
“>
புராண காலங்களில் சிலந்தி, பாம்பு மற்றும் யானை ஆகியவை சிவனை வழிபட்டு முக்தி அடைந்த கதைகளைப் போல, தற்போதைய நவீன காலத்திலும் விலங்குகள் சிவபெருமான் மீது பக்தி செலுத்துவது அந்த ஈசனின் மகிமையே என்று பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
