ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞன், 37 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை அடித்த கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். அன்று பிரிந்தவர், தனது தாய் மற்றும் உடன்பிறப்புகளைப் பார்க்காமல் பல நாடுகளுக்கு அலைந்து திரிந்து, பல தசாப்தங்களை ஏதிலியாகக் கழித்துள்ளார். காலம் உருண்டோடிய நிலையில், தற்போது ஒரு முதியவராகத் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ​பிரிந்தபோது வாலிபனாகச் சென்றவர், இப்போது நரைத்த முடியுடனும், வாழ்நாள் முழுவதும் சுமந்த வலிகளுடனும் தனது தாயைச் சந்தித்தபோது அங்கிருந்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டனர்.

37 ஆண்டுகால ஏக்கத்திற்குப் பிறகு தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் அவர் இணைந்த இந்த உருக்கமான தருணம், சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. “ஒரு சிறிய கோபம் ஒரு மனிதனின் வாழ்நாளில் பாதியை எப்படிப் பறித்துவிட்டது பாருங்கள்” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.