சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது என்பது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமற்றது மற்றும் மிகவும் சவாலானது என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் ஆஜரான அவர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் சிறுவர்கள் கணக்குத் தொடங்குவதை முற்றிலுமாகத் தடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பட்டியலிட்டுள்ளார்.
தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த நிலையிலும், சிறுவர்களின் வயதைக் துல்லியமாகக் கண்டறிந்து அவர்களைத் தடுப்பது கடினம் என்று அவர் கூறியிருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாக மெட்டா நிறுவனம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஜூக்கர்பெர்க்கின் இந்த ‘சரண் அடையும்’ போக்கு பெற்றோர்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
