இந்தியாவில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லை ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை இந்தப் பதிவு சுட்டிக்காட்டுகிறது. வெறும் தங்குமிடங்கள் (Shelter Homes) அமைப்பதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்றும், வளர்ந்த நாடுகளைப் போல சுமார் 30 சதவீத நாய்களுக்கு ஊசி போட்டு அவற்றை அழிக்க வேண்டும் என்றும் அந்த எக்ஸ் (X) பயனர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். இல்லையெனில், மக்கள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கொடூரமாக உயிரிழக்கும் அவலம் தொடரும் என்றும், அதே சமயம் ‘தடுப்பூசி மாஃபியா’க்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வழக்கறிஞர்கள் மட்டுமே இதனால் லாபமடைவார்கள் என்றும் அந்தப் பதிவில் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
भारत में जितने आवारा कुत्ते हैं वह बहुत बड़ी समस्या बन चुके हैं
शेल्टर होम से काम नहीं चलेगा
करीब 30 परसेंट कुत्तों को विदेशो की तरह इंजेक्शन लगाकर खत्म करना होगा
तब जाकर लोगों का लगातार रैबीज से मारना रुकेगा
वरना इंसान रैबीज से तड़प तड़प कर पागल होकर मरते रहेंगे और कपिल… pic.twitter.com/qUv06YcKf9
— 🇮🇳Jitendra pratap singh🇮🇳 (@jpsin1) February 16, 2026
இந்தப் பதிவுடன் பகிரப்பட்டுள்ள வீடியோவில், தெருவில் நின்று கொண்டு ஒரு பெண் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு திடீரென ஓடி வந்த தெருநாய் ஒன்று, எந்த ஒரு தூண்டுதலும் இன்றி அந்தப் பெண்ணை மிகவும் கொடூரமாகக் கடிக்கத் தொடங்குகிறது. வலியால் அலறிய அந்தப் பெண்ணைக் காப்பாற்ற அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டுகின்றனர். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்தக் காட்சி, தெருநாய்கள் எந்த நேரத்திலும் யாரையும் தாக்கலாம் என்பதற்கு ஒரு பயங்கரமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
