சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கனடாவுக்கு எதிரான 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் விளையாடவில்லை.

அவருக்குப் பதிலாகத் தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்ற டேரில் மிட்செல் இது குறித்து விளக்குகையில், சான்ட்னர் இரவு சாப்பிட்ட பர்கர் ஒத்துக்கொள்ளாததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் குணமடைந்துவிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.