வியட்நாமில் சிறுவன் ஒருவன் தனது காதில் தொடர்ந்து வலி மற்றும் அசௌகரியம் இருப்பதாகப் பெற்றோரிடம் கூறியுள்ளான். முதலில் சாதாரணப் பூச்சி ஏதேனும் புகுந்திருக்கலாம் என நினைத்த பெற்றோர், அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனின் காதை எண்டோஸ்கோபி (Endoscopy) மூலம் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிறுவனின் காதின் ஆழத்தில் ஒரு சிறிய மெட்டல் ஸ்க்ரூ (Screw) சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட்டு, சிறுவனின் செவித்திறனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அந்த ஸ்க்ரூவை வெளியே எடுத்தனர்.

“>

விளையாடும்போது தெரியாமல் அந்த ஸ்க்ரூ காதிற்குள் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.