இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் கைகோர்த்துள்ளனர்.
‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி வில்லனாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பணக்கட்டுகளுடன் ஒரு மனிதன் பள்ளத்தில் விழுவது போல மிரட்டலாக வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது.
