சமூக வலைதளங்களில் அவ்வப்போது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு சிறுவன் மிகக் கியூட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது. அந்தப் படத்தில் இருப்பவர் வேறு யாருமல்ல, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாகவும், வசூல் மன்னனாகவும் திகழும் ‘தளபதி’ விஜய் தான்.
மேலும் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், இன்று கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட உச்ச நட்சத்திரமாகத் திகழ்கிறார். ஆரம்பக் காலத்தில் பல விமர்சனங்களைச் சந்தித்தாலும், தனது கடின உழைப்பாலும் தனித்துவமான நடனத்திறமையாலும் ஒரு மாபெரும் ஆளுமையாக அவர் உருவெடுத்தார்.
இதனால் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக மாறியுள்ள விஜய்யின் இந்தப் பழைய புகைப்படம், “அப்போதே இவ்வளவு கியூட்டாக இருக்கிறாரே” என ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருவதுடன், திரையுலகில் ஒரு சாதாரண மகனாக நுழைந்து ‘தளபதி’யாக உயர்ந்த அவரது பயணத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
