கொழும்பில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பந்தாடியது. இந்த படுதோல்வியை ஜீரணிக்க முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் எல்லையை மீறிச் செயல்படும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

அதில் ஒரு வீடியோவில், பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், தோல்வி அடைந்த ஆத்திரத்தில் ஒரு பெண்ணின் முகத்தில் கேக்கை அமுக்கி அநாகரீகமாகச் செயல்பட்டுள்ளார்.

இது வெறும் விளையாட்டுத்தனம் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், பலரும் “பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதை இதுதானா?” எனச் சாடி வருகின்றனர். மற்றொரு வீடியோவில், தனது நாடு தோற்ற விரக்தியில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ஆத்திரத்துடன் தனது வீட்டு டிவியையே அடித்து நொறுக்கியுள்ளார்.

இஷான் கிஷனின் அதிரடி அரைசதத்தால் இந்தியா 176 ரன்கள் குவிக்க, பதில் விளையாடிய பாகிஸ்தான் 114 ரன்களுக்குச் சுருண்டது. ஒவ்வொரு முறையும் இந்தியாவிடம் அடிவாங்கும் பாகிஸ்தான் ரசிகர்களின் இந்த விபரீதச் செயல்கள், “விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கக் கூடாதா?” என நெட்டிசன்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.