சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். அந்த வகையில், தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர் ஒருவர் அளித்த பதில் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு மாணவரிடம் செய்தியாளர் போன்று பெண் ஒருவர் மைக் பிடித்து நேர்காணல் செய்கிறார். “தேர்வு எழுதிவிட்டு வருகிறீர்களா?” என்ற கேள்விக்கு அந்த மாணவர் மிகவும் உற்சாகமாக “ஆமாம்” எனப் பதிலளிக்கிறார்.
தொடர்ந்து, “தேர்வு எப்படி இருந்தது?” எனக் கேட்க, அந்த மாணவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன், “மிகவும் நன்றாக இருந்தது, சிறப்பாக எழுதியுள்ளேன்” எனப் புன்னகையுடன் கூறுகிறார். அவரது பதிலைக் கேட்டு அந்தப் பெண்ணும் மெச்சிக் கொள்கிறார்.
ஆனால், அடுத்த நொடியே அந்தப் பெண், “இன்று என்ன தேர்வு (Subject)?” என்று கேட்டபோதுதான் ட்விஸ்ட் அரங்கேறியது. அந்த மாணவர் ஒரு நிமிடம் திகைத்து நின்று, பக்கத்தில் இருந்த நண்பனிடம், “டேய்.. இன்னைக்கு என்ன எக்ஸாம்டா?” எனக் கேட்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், “என்ன தேர்வு என்று கூடத் தெரியாமல் அப்படியென்ன எழுதினீர்கள்?” என வினவினார். அதற்கு அந்த மாணவர் கொஞ்சமும் தயங்காமல், “ஏதோ ஒன்று எழுதிவிட்டேன், நிச்சயம் பாஸ் ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என சிரித்துக்கொண்டே பதிலளிக்கிறார்.
View this post on Instagram
‘last24hrofindia’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது பள்ளி, கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இவர்தான் உண்மையான லெஜண்ட்” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
“எங்கள் காலத்திலும் இப்படி சில நண்பர்கள் இருந்தார்கள்” என மற்றொருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த வீடியோ உண்மையில் நடந்ததா அல்லது வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட ‘ப்ராங்க்’ (Prank) வீடியோவா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை. எது எப்படியோ, இந்த மாணவனின் ‘அசாத்திய தன்னம்பிக்கை’ இணையவாசிகளைப் பெருமளவில் கவர்ந்துள்ளது.
