கன்னடத் திரையுலகின் மூத்த இயக்குநரும், பழம்பெரும் கலைஞருமான ஜோ சைமன் (80), நேற்று (பிப். 14) பெங்களூருவில் காலமானார்.

பெங்களூருவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1970-களில் திரையுலகில் தடம் பதித்த இவர், கன்னட சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக, 1977-ஆம் ஆண்டு வெளியான ‘ஒண்டு பிரேமதா கதே’ (Ondu Premada Kathe) என்ற திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்தை கன்னடத் திரையுலகில் முக்கியக் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தியவர் இவரே. ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட பிறகும், ஜோ சைமனுடன் நீண்ட கால நட்பைத் தொடர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.