குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஒரு அரசு பெண் மருத்துவருக்கு அவரது புகுந்த வீட்டிலேயே நடந்த கொடுமை 21-ஆம் நூற்றாண்டின் மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த 2023-இல் திருமணம் முடிந்த நிலையில், கணவருக்கு தந்தை ஆகும் தகுதி இல்லை என்பதால் மூன்று முறை செய்யப்பட்ட IVF சிகிச்சைகளும் தோல்வியில் முடிந்தன.

இதனால் வாரிசு வேண்டி துடித்த அந்த பெண் டாக்டரை, “கணவரின் தம்பியுடன் சேர்ந்து குழந்தையை பெற்றுக்கொள்” அல்லது “அவரது ஸ்பெர்ம் மூலம் கருத்தரி” என்று அவரது மாமனாரே வற்புறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் கொடுமையின் உச்சமாக, காவல்துறையில் அதிகாரியாக (PSI) பணியாற்றும் மாமனாரே தனது அதிகாரத்தை காட்டி, “எங்கு சென்றாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது” என அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

மேலும், கணவர் தனது வேலையை மறைத்து ரகசியமாக தாய்லாந்து சென்றதை தட்டிக்கேட்ட அந்த பெண் மருத்துவரை, அவரது மாமனார், மாமியார் மற்றும் கணவரின் தம்பி  ஆகியோர் சேர்ந்து தடியால் கொடூரமாக தாக்கி வீட்டிலிருந்தே வெளியேற்றியுள்ளனர்.

உயிருக்கு பயந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தப்பிய அந்த பெண் டாக்டர், தற்போது தனது கணவர் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.