பெட்ரோல் பங்க்குகளில் மொபைல் போன் பேசக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது என்பது பொதுவான விதிமுறைதான். ஆனால், அதைச் சாதாரணமாகச் சொன்னால் யாரும் கேட்பதில்லை என்பதால், பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் தனது போஸ்டரில் ‘நெக்ஸ்ட் லெவல்’ ஐடியாவைப் பயன்படுத்தியுள்ளார்.
அந்த போஸ்டரில், “இங்கு சிகரெட் பிடிப்பவர்கள் வாழ்க்கை வேண்டுமானால் விலை மதிப்பதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களது பெட்ரோல் விலை மதிப்புள்ளது.” என்று நக்கலாகவும், அதே சமயம் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. சிகரெட் நெருப்பு பெட்ரோலில் பட்டால் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்பதைச் சிரிப்பு கலந்த பயத்தோடு உணர்த்தும் இந்த வாசகம் இப்போது சமூக வலைதளங்களில் ‘கதர்’ கிளப்பி வருகிறது.
Someone give this petrol pump owner an award 😭😭😭
Itna Sach nahin Bolna tha 🔥🔥🔥#FI pic.twitter.com/iARFHbUPMW
— Fundamental Investor ™ 🇮🇳 (@FI_InvestIndia) February 10, 2026
“விளம்பரம்னா இதுதான்டா விளம்பரம்.. ஒரே வரியில எமனை கண்ணு முன்னாடி காட்டிட்டாங்க” என நெட்டிசன்கள் இந்த போஸ்டரை ஷேர் செய்து லைக்குகளைக் குவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே இப்படி ஒரு வித்தியாசமான ‘நோ-ஸ்மோக்கிங்’ போஸ்டரை யாரும் பார்த்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த வாசகம் இப்போது செம டிரெண்டாகி வருகிறது.
