ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டினா அம்பானி ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை (ED) தற்போது அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட பணமோசடி தொடர்பான வழக்கின் விசாரணைக்காக, வரும் பிப்ரவரி 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல நிதி நெருக்கடிகளில் சிக்கியுள்ள அனில் அம்பானிக்கு, வங்கிக் கடன் தொடர்பான இந்த புதிய விசாரணை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த காலங்களில் பலமுறை விசாரணைக்கு ஆஜராகியிருந்தாலும், தற்போது எஸ்பிஐ வங்கியின் புகாரால் அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நகர்வு, அம்பானி குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த விசாரணையில் முக்கிய ஆவணங்களுடன் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் தொழில்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
