உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான காசிராம் என்பவருக்கும், மஞ்சுரி தேவி என்பவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டிற்கு வந்த காசிராம், தனது மனைவியை உடலுறவுக்கு அழைத்துள்ளார்.

ஆனால், அவர் போதையில் இருந்ததாலும், ஏற்கெனவே அவர் மீது கோபத்தில் இருந்ததாலும் மஞ்சுரி தேவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற காசிராம், கத்தியை எடுத்து தனது பிறப்புறுப்பைத் தானே துண்டித்துக்கொண்டார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காசிராம் கூறுகையில், கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாகத் தனது மனைவி தன்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் தவிர்த்து வருவதாகவும், அந்த விரக்தியிலேயே தான் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மஞ்சுரி தேவியோ, அவர் குடித்துவிட்டு வந்ததால் தான் மறுத்ததாகவும், தனது கணவர் செய்த தவறுக்குத் தன்னை இப்போது பலிகடா ஆக்குவதாகவும் கூறியுள்ளார். இந்த வினோத மற்றும் கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.