பெங்களூரு மைசூரு சாலை அருகே வசிக்கும் 49 வயது பெண்மணி, தனது 23 வயது மகள் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பிபிஏ பட்டதாரியான மூத்த மகள், கடந்த ஒரு வருடமாக வருண் (என்கிற கிரிதர்) என்ற நபருடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு மகள் ரகசியமாக வீடியோ கால் பேசுவதைக் கண்ட தாய், சந்தேகமடைந்து மகளின் செல்போனை ஆய்வு செய்துள்ளார்.
அதில், அந்த மகள் தனது அந்தரங்கப் புகைப்படங்களை வருணுக்கு அனுப்பியதோடு மட்டுமின்றி, தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த அத்தையின் நிர்வாணப் படங்களையும் ரகசியமாகப் படம் பிடித்து அந்த நபருக்குப் பகிர்ந்துள்ளது தெரியவந்தது. அந்த நபர் வற்புறுத்தியதன் பேரில் இந்த படங்கள் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்துக் கேட்ட பெற்றோருடன் வாக்குவாதம் செய்த அந்தப் பெண், கடந்த வாரம் வருணைத் திருமணம் செய்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குடும்பப் பெண்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள வருணைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
