சுதா சந்திரனின் வீட்டில் நடைபெற்ற ‘மாதா கி சௌகி’ என்ற ஆன்மீக பூஜையின் போது, அவர் சுயநினைவின்றி ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது.
அந்தப் பரவச நிலையில் இருந்த வெறும் 6 முதல் 7 நிமிடங்களில், சுதா சந்திரன் சுமார் 4 லிட்டர் தண்ணீரை அப்படியே குடித்துள்ளார். “சாதாரணமாக ஒரு மனிதனால் இது சாத்தியமா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அந்த நேரத்தில் தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்றும், தன் கணவர் சொல்லித்தான் தனக்கே விஷயம் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு “இது வெறும் நடிப்பு” என்றும், “புதுவருட பார்ட்டி போதையில் இருக்கிறார்” என்றும் கிண்டல் செய்தவர்களுக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
“யாரிடமும் எனது நம்பிக்கையை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை; இப்படி நடிப்பதன் மூலம் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது?” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
