தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 13-ம் தேதி சேலம் தாளமுத்து நடராசன் மைதானத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவிருந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கூட்டத்திற்கான அனுமதி கோரி தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
