லாகூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றியது.
இருப்பினும், ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கொன்னோலியின் விக்கெட்டைப் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கவாஜா நஃபே வீழ்த்திய விதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முகமது நவாஸ் வீசிய 14-வது ஓவரில், பந்தை எதிர்கொள்ளக் கொன்னோலி முன்னேறி வந்தபோது, பந்தை லாவகமாகப் பிடித்த நஃபே ஸ்டம்புகளைத் தகர்த்தார்.
View this post on Instagram
“>
ஆனால், தொலைக்காட்சியில் மறுபதிப்பு செய்யப்பட்டக் காட்சிகளில் (Replay), நஃபே தனது வலது கையில் பந்தை வைத்துக் கொண்டு, காலியாக இருந்த இடது கையால் ஸ்டம்புகளைத் தட்டியது அம்பலமானது. ஐசிசி விதிப்படி (Law 29.2.1), பந்தை வைத்துள்ள கையால் மட்டுமே ஸ்டம்புகளை வீழ்த்த வேண்டும்; ஆனால் களத்தில் இருந்த நடுவர் இதனைச் சரியாகக் கவனிக்காமல் ‘அவுட்’ வழங்கியது ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pakistan invented a new stumping technique: hold ball in right hand, break stumps with left.
Pakistan Wicket Keeper Khawaja Nafay living upto CHEATER BRAND & still got the wicket.
Umpires sleeping/ Viral Replay exposed the Cheat!
#PAKvAUS pic.twitter.com/tUDVvlCjcW— Megh Updates 🚨™ (@MeghUpdates) February 2, 2026
“>
“பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே ஏமாற்றுத்தனம் தான்” என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வரும் நிலையில், இது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் வீரர்கள் மீது ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
