சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோவில், பெண் ஒருவர் ஓடிக்கொண்டிருந்த கனரக லாரியில் துணிச்சலாக ஏறி அதை நிறுத்திய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேடையில் இருந்து எதிர்பாராத விதமாகச் சரிந்து கட்டுப்பாட்டை இழந்து நகரத் தொடங்கிய அந்த லாரியை, அங்கிருந்த இரண்டு ஆண்கள் பின்னால் இருந்து இழுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால், லாரியின் வேகத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில், அங்கிருந்த ஒரு பெண் சிறிதும் யோசிக்காமல் ஓடும் லாரியின் கதவைத் திறந்து ஓட்டுநர் சீட்டில் ஏறி, உடனடியாகக் கைபிரேக்கை போட்டு லாரியை நிறுத்தினார்.

அந்தப் பெண்ணின் சமயோசித புத்தியும் துணிச்சலும் ஒரு மிகப்பெரிய விபத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. சில நொடிகளில் அவர் எடுத்த இந்த அதிரடி முடிவால் பல உயிர்களும் சேதங்களும் தவிர்க்கப்பட்டன.

 

View this post on Instagram

 

A post shared by ADULTGRAM | (@_adultgram_)

“>

ஒருவேளை அவர் அந்த நேரத்தில் செயல்படாமல் இருந்திருந்தால், அந்த கனரக வாகனம் பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தியிருக்கும். தற்போது இந்த வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கான மக்களால் பகிரப்பட்டு வருவதோடு, அந்தப் பெண்ணின் வீரத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.