இணையதளத்தில் செல்லப் பிராணிகளின் வீடியோக்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. சில நேரங்களில் அவை செய்யும் சேட்டைகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். ஆனால், இப்போது வைரலாகி வரும் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd) நாயின் வீடியோ, சிரிப்பைத் தாண்டி நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மைதானத்தில் பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க, விக்கெட்டுக்கு பின்னால் கீப்பர் நிற்க வேண்டிய இடத்தில் ஒரு நாய் நிற்கிறது. பந்து வீசப்பட்டதும் பேட்ஸ்மேன் அடிக்க, பந்து காற்றில் உயரே எழுகிறது. அவ்வளவுதான்! மின்னல் வேகத்தில் ஓடிச் சென்ற அந்த நாய், பந்து கீழே விழுவதற்குள் லாவகமாகத் தனது வாயால் கேட்ச் பிடித்து அசத்தியது.
இதை பார்த்த நெட்டிசன்கள், “பாகிஸ்தான் டீமை விட இந்த நாய் சூப்பரா பீல்டிங் பண்ணுதுப்பா!” என கமெண்ட்களைத் தட்டி விடுகின்றனர்.
