உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம், நடுவழியில் எரிபொருள் தீர்ந்து நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
A group of bikers helped by pushing an AMBULANCE that had run out of diesel.
Unfortunately, 80-90% of our country lacks ON-TIME ambulance services. pic.twitter.com/yCyefAnNTp
— Dr Ranjan (@AAPforNewIndia) January 28, 2026
ஆம்புலன்ஸ் பாதியிலேயே நின்றதைக் கண்டு பதற்றமடைந்த நோயாளியின் உறவினர்கள் உதவி கோரி கூச்சலிட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாகச் செயல்பட்டனர்.
தங்கள் வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஊற்றி, அந்த வாகனம் மீண்டும் இயங்க உதவி செய்தனர். இதனால் உரிய நேரத்தில் அந்த நோயாளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இளைஞர்களின் இந்த மனிதாபிமானச் செயலும் சமயோசித புத்தியும் அங்கிருந்தவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரது மனங்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்வதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
